--- --:--:-- --

மருத்துவக் கல்லூரிகளில் முதலாமாண்டு அறிமுக வகுப்புகள் தொடக்கம்..!

22

ரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ மாணவர்களுக்கான முதலாமாண்டு அறிமுக வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த நவம்பர் 18ஆம் தேதி தொடங்கி ஜனவரி 13ம் தேதிவரை நடந்தது.

 

எம்‌பி‌பி‌எஸ், பி‌டி‌எஸ் அறிமுக வகுப்புகள் தொடங்கின. முறையான வகுப்புகள் பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி தொடங்கும் என்று மருத்துவக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

 

கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள் அனைவரும் கொரொனா தொற்று பரிசோதனை செய்வதற்கான சான்றிதழை ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆள்மாறாட்டத்தை தவிர்ப்பதற்காக அனைத்து விதமான சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி நடைபெறுகிறது.

 

கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற பேராசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Right Menu Icon