தொகுப்பாளர் ரக்ஷன் கொடுத்த டார்ச்சர் தான் சித்ராவின் தற்கொலைக்கு காரணமா..!
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக அவரது கணவர் ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் சமூக வலைதளங்களின் மூலம் சித்ரா குறித்து தனக்கு பல தகவல்கள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
சித்ரா ஏற்கனவே மூன்று ஆண்களை காதலித்து நிச்சயதார்த்தம் வரை சென்று திருமணம் நின்று உள்ளதாகவும் சித்ரா மது அருந்தும் பழக்கம் உடையவர் என்றும் விஜய் டிவியில் தொகுப்பாளரான ரக்சன் என்பவருடன் டேட்டிங்கில் எடுத்த நெருக்கமான புகைப்படங்களை வைத்துக்கொண்டு மிரட்டியதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியாவதாக மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார்.
கடந்த ஆண்டு சென்னை திருவான்மியூரில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய்க்கு வீடு வாங்கியதாகவும், சுமார் ஒரு கோடி ரூபாய் ஆடி கார் வாங்கியதாகவும் அதற்கான முதலீட்டுக்கு அவருக்கு தெரிந்த நபர்கள் உதவியதாகவும் மீதமுள்ள தொகையை மாத தவணையாக அடைத்தும் வந்துள்ளார் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல பெரிய தொழில் அதிபர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் சித்ராவுக்கு பழக்கம் என்பதாலேயே திருமணத்தை மிக பிரமாண்டமாக நடத்த முடிவு செய்தார் என்று ரவிச்சந்திரன் கூறியுள்ளார். முக்கிய அரசியல்வாதியுடன் சித்ரா தினமும் மணிக்கணக்கில் பேசியதாகவும் பல ஆதாரங்களை கொடுத்து திருமணத்தை நிறுத்தி அசிங்கப்படுத்த போவதாகவும் அவர் மிரட்டியதாக தொடர்ந்து தொந்தரவு வருவதாகவும் மனுவில் கூறியுள்ளார்.
மிகவும் பிரபலமான நடிகை ரேட்டிங்கில் முதலிடத்தில் உள்ளார் என்பதால் அவருக்கு முதலீடு செய்த மற்றும் பழக்கம் உள்ள பெரிய நபர்கள் சினிமா நபர்கள் மற்றும் அரசியல் வாதிகளும் சித்ரா உடன் தொடர்பில் இருந்து வந்துள்ளனர் என்றும் திருமணம் நடந்தால் பிரபலம் குறையத் தொடங்கி விடும் என மிரட்டல் வந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என மனுவில் தெரிவித்துள்ளார்.
சித்ரா தங்கியிருந்த ஹோட்டலில் சிசிடிவி கேமரா பதிவுகள் அழிக்கப்பட்டு விட்டதாக செய்திகள் வந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். சில தொலைபேசி எண்களில் இருந்து அழைப்பு வந்தால் சித்ரா பதற்றத்துடன் தனியாக சென்று பேசுவார் என்றும் பின்னர் அந்த எண்களை அழித்து விடுவார் என்றும் தன்னிடம் கூறியுள்ளதாக ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.
எனவே சித்ரா தொலைபேசி அழைப்பு விவரங்களை திரட்டி திருமணம் செய்தால் பின் விளைவுகள் ஏற்படும் என மிரட்டியவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார். சித்ராவுக்கு மிரட்டல் அல்லது பாலியல் மிரட்டல் கொடுத்த நபர்களுக்கு பயந்து சித்ராவின் தாயார் அமைதி காப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.
எனவே உண்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து தனது மகனை விடுவிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.







