27ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் என லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவிப்பு..!
வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தும் விவகாரம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து வரும் 27ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக லாரி உரிமையாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கத்தில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது லாரிகளில், கட்டுப்பாட்டு கருவி பொருத்துவது அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளை ஒன்பது அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னர் செய்திளார்களிடம் பேசிய நிர்வாகிகள் 9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து வரும் 27ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் லாரிகளை இயக்க போவதில்லை என தெரிவித்தனர்.
இதில் 12 லட்சம் வாகனங்கள் பங்கேற்கும் என்றும் அரசு உரிய முடிவு எடுக்கவில்லை எனில் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களும் நிறுத்தப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.







