--- --:--:-- --

பேய் விரட்டுவதாக கூறி அடித்தே கொலை செய்த திருநங்கை சங்கர்..!

7

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ஸ்ரீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்த 19 வயதான ஆயிஷாவின் கணவர் மகபூப் பாஷா. இவர் கடந்த ஜூன் மாதம் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததால் அரசு ஸ்டான்லி மருத்துவமனை அருகே இருக்கும் தர்காவில் இரண்டு நாட்கள் வைத்து பேய் பிடித்ததாக கூறி மந்திரம் ஓதியுள்ளனர்.

 

ஆனால் அங்கு குடும்ப ஆகாததால் ஆயிஷாவின் உறவினர்கள் சிலரின் அறிவுறுத்தலின்படி செங்குன்றம் அருகே உள்ள புத்தூர் அம்மன் கோவில் அருகே பேய் விரட்டும் தொழில் செய்துவந்த திருநங்கையான சங்கர் என்ற கோடாங்கியிடம் அழைத்து சென்றனர். அங்கு மகபூப் பாஷாவை பத்து நாட்கள் தங்க வைத்து பூஜை செய்துள்ளனர்.

 

அப்பொழுது மெகபூப் அனுஷாவிற்கு பேய் பிடித்துள்ளதாக கூறி திருநங்கை கோடாங்கி ஷங்கர் காஞ்சனா போல ஆவேசமாகி உடல் முழுவதும் பிரம்பால் அடித்துள்ளார். இதில் பல அடிகள் தலையில் விழுந்துள்ளது. இதனால் கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி மெகபூபா ஷாவுக்கு உடல்நலக் கோளாறு ஏற்படவே அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக அவரது மனைவி ஆயிஷா வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் பிரேத பரிசோதனை செய்ததில் உடலில் பல இடங்களில் ஏற்பட்ட காயங்களால் ரத்தக்கட்டு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.

 

தலையில் உண்டான ரத்தக்கட்டு மூலமாக உடலில் பலவித உறுப்புகள் செயலிழந்து முடிவில் அவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலியானது தெரியவந்தது. பேய் ஓட்டும்போதும் சாமியார் சங்கர் அடித்ததால் ஏற்பட்ட காயத்தால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு இறந்தது உறுதி செய்யப்பட்டதால் திருநங்கை கோடாங்கி ஷங்கரை வண்ணாரப்பேட்டை போலீசார் 6 மாதம் கடந்து கைது செய்துள்ளனர்.

 

முதலில் மூச்சுத்திணறலால் உயிரிழந்ததாக கூறப்பட்டதால் அவர் கொரொனாவால் உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில் உலகில் இல்லாத பேயை விரட்டுவதாக கொடூரமாக தாக்கி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

அதேநேரத்தில் மெகபூபா ஷாவை முறையான மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை மேற்கொண்டிருந்தால் இதுபோன்ற விபரீத மரணத்தை தவிர்க்கலாம் என்கின்றனர் காவல்துறையினர்.

Leave a Reply

Right Menu Icon