--- --:--:-- --

கைலாசா நாட்டிற்கு வருவோற்கு இலவச விசா..!

13

கைலாச நாட்டிற்கு ஆஸ்திரேலியா வரை வந்துவிட்டால் ஆஸ்திரேலியாவில் இருந்து இலவசமாக விமானத்தில் அழைத்துச் செல்ல உள்ளதாக நித்தியானந்தா கூறியுள்ளார்.

 

நித்யானந்தா பேசுவது போன்று வெளியாகியுள்ள வீடியோவில் வருகை தருபவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்றும், எந்தவித கட்டணமும் இல்லாமல் இலவசமாக வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

ஆஸ்திரேலியா வரை சொந்த செலவில் வந்து விட்டால் அங்கிருந்து கைலாசத்துக்கு கருடா என பெயரிடப்பட்டுள்ள சிறிய விமானங்கள் மூலமாக அவர்கள் எந்தவித கட்டணமும் இன்றி அழைத்து வரப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

திரும்பும் வரை உணவு தங்குமிடம் போன்ற வசதிகளும் போக்குவரத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon