பிரியாணி சாப்பிட கூப்பிடாததால் பாட்டியை அடித்துக் கொன்ற பேரன்..!
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பிரியாணி சாப்பிட கூப்பிடாததால் ஆத்திரத்தில் பாட்டியை அடித்துக் கொன்ற பேரனை போலீசார் கைது செய்தனர். மோடி குப்பத்தை சேர்ந்த கண்ணன் ராஜேஸ்வரி தம்பதிக்கு மூன்று மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர்.
நேற்றிரவு மகள் வழி பேரன், பேத்திகள் வீட்டிற்கு வந்ததால் ராஜேஸ்வரி பிரியாணி சமைத்து விருந்து வைத்துள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த மகன் வழி பேரன் ராகேஷ் தன்னை ஏன் பிரியாணி சாப்பிட கூப்பிட வில்லை என குடிபோதையில் தாத்தாவிடம் சண்டையிட்டு உள்ளார்.
சண்டையை விலக்கச் சென்ற பாட்டி ராஜேஸ்வரியை அடித்துத் தாக்கி தார்சாலையில் இழுத்து தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் பாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.







