மு. க ஸ்டாலின் சைக்கிளிங் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது..!
திமுக தலைவர் மு. க ஸ்டாலின் கிழக்கு கடற்கரை சாலையில் அதிகாலை சைக்கிளிங் செய்யும் வீடியோவும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
உடற்பயிற்சி மேற்கொள்ளும் விதமாக திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த சில மாதங்களாக கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிளிங் செய்து வருகிறார். அந்த வகையில் இன்று காலை கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிளிங் சென்றவர் ஆற்றுப்பாலத்தில் இருந்தபடி உதயமாகும் சூரியனை பார்த்து ரசிக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
சாலையோர உணவு விடுதியில் தேனீர் அருந்துவது, சக உடற்பயிற்சியாளருடன் கலந்துரையாடுவது, குழு புகைப்படம் எடுத்துக் கொள்வது போன்ற புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.






