தமிழகத்தில் 8 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் கல்லூரிகள் திறப்பு..!
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி தமிழகத்தில் சுமார் 8 மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்படுகின்றன. பெருந் தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.
இறுதியாண்டு கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்பட்டு மற்ற ஆண்டுகள் படிக்கும் மாணவர்கள் அடுத்த ஆண்டு கல்வி தொடர அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் இன்று முதல் இறுதி ஆண்டு இளங்கலை முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்காக கல்லூரிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.
இதற்காக உயர்கல்வி நிறுவனங்கள் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி கல்லூரி வளாகம், வகுப்பறை என அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளி கடைபிடிக்கவேண்டும். உள் நுழையும் இடங்களில் சானிடைசர், வெப்பநிலை கணக்கிடும் கருவியை சனிடைசர் முகக்கவசம் அணிய வேண்டும்.
பெற்றோர்களுக்கு பெருந்தொற்று இருந்தால் கண்டிப்பாக மாணவர்களை கல்லூரிக்கு அனுமதிக்கக்கூடாது. மாணவர்களை பகுதி பகுதியாக பிரித்துசுழற்சி முறையில் பாடங்கள் எடுக்கலாம். ஒரு நபர் இடைவெளிவிட்டு வகுப்பறையில் மாணவர்கள் அமர வைக்க வேண்டும். முக கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.
ஒரு அறையில் ஒரு மாணவர் மட்டுமே தங்க அனுமதி. மாணவர்கள் முடிந்தவரை கல்லூரிகளுக்கு அருகில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி கொள்ள வேண்டும். பொது வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பல்வேறு உயர் கல்வி நிறுவனங்கள் இன்று முதல் திறக்கப்படுகின்றன.







