--- --:--:-- --

விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் தீபாவளிக்கு திரையிடப்படவில்லை..!

2

திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் இடையே உள்ள பிரச்சனை காரணமாக நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் தீபாவளிக்கு திரையிடப்படவில்லை என தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் மற்றும் விஜய்சேதுபதி இணைந்து நடித்து இருக்கக்கூடிய படம் மாஸ்டர். இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

 

இந்தப் படம் கடந்த ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு அன்று திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதை தொடர்ந்து கொரொனா காலம் என்பதால் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டது. இந்நிலையில் இந்தப் படத்தினுடைய வெளியீடு தொடர்ந்து காலதாமதமாகி கொண்டிருந்தது.

 

இந்த படம் தொடர்ந்து தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது திரையரங்குகளில் உரிமையாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே பெரும் பனிப்போர் நிலவி வருகிறது.

 

இதன் காரணமாக மீண்டும் மாஸ்டர் படம் வெளியாவதில் சிக்கல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது அந்த படத்தின் தயாரிப்பாளர் லலித்குமாரை தொடர்பு கொண்டு கேட்டபோது இந்த படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்படவில்லை என பதில் கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon