முதலாம் ஆண்டு பொறியியல் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 23ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும்..!
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நவம்பர் 23ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கல்லூரிகள் வருகிற 16-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்த நிலையில் பொறியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுமா அல்லது நேரடியாக நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு அக்டோபர் 30-ஆம் தேதி நிறைவடைந்த நிலையில் நவம்பர் 23-ம் தேதி முதல் பிப்ரவரி 24ஆம் தேதி வரை முதலாம் ஆண்டு வகுப்புகள் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.






