நீரின் மீது தரையிறங்கும் நவீன விமானம் மாலத்தீவிலிருந்து இந்தியா வந்தடைந்தது..!
நீரின் மீது தரையிறங்கும் டிவின் ஆர்டர் 300 என்ற ஸ்பைஸ் ஜெட்டின் நவீன கடல் விமானம் மாலத்தீவு தலைநகர் மாலியிலிருந்து புறப்பட்டு கேரளாவில் தொழில்நுட்ப பரிசோதனைக்காக பயணத்தை நிறுத்தியது. கொச்சியில் உள்ள பெண்டுர்தி நீர்நிலை மீது அந்த விமானம் வெற்றிகரமாக தரை இறக்கப்பட்டது.
அகமதாபாத்தில் சபர்மதி நீர் நிலையில் இந்த விமானம் நீர்வழிப் போக்குவரத்துக்கு பயன்படும் என்று கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விமானத்தில் அதிகபட்சமாக 12 பேர் வரை பயணிக்கலாம்.






