சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படத்தின் வெளியீடு ஒத்தி வைப்பு..!
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப்போற்று திரைப்படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏர் டெக்கான்ஸ் நிறுவனத் தலைவர் கோபிநாத்தின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட இந்த படம் வரும் 30-ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள விமானப்படை தொடர்பான காட்சிகளுக்கு உரிய ஒப்புதல் கிடைக்காததால் படவெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக சூர்யா அறிவித்துள்ளார்.






