--- --:--:-- --

ஐந்தாம் கட்ட தளர்வுகள் இன்று முதல் அமலாகிறது..!

10

பொது முடக்க ஐந்தாம் கட்ட தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வருவதையொட்டி திரையரங்குகள், கேளிக்கைப் பூங்காக்கள் திறக்கப்படுகின்றன. கொரொனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதியுடன் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.

 

அதன்பின் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டாலும் நான்கு கட்டங்களாக பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பொது முடக்கத்தில் ஐந்தாம் கட்ட தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.

 

தனி கட்டடங்களில் இயங்கும் திரையரங்குகள் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் கேளிக்கை விடுதிகளை திறக்கவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

 

பள்ளிகள் மற்றும் நீச்சல் குளங்களை திறக்கவும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இவற்றைச் செயல்படுத்த அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் ஆறு மாதங்களுக்குப் பிறகு புதுச்சேரி, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இன்று முதல் திரையரங்குகளில் திறக்கப்படுகின்றன. எனினும் தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பதற்கு இதுவரை அரசு அனுமதிக்கவில்லை.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon