இருசக்கர வாகனத்தின் மீது அதி வேகமாக வந்த கார் மோதி விபத்து..!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது அதி வேகமாக வந்த கார் மோதும் வீடியோ வெளியாகியுள்ளது. வேடசந்தூர் சேர்ந்த சரவணன் சேடப்பட்டியில் உள்ள மாமியார் வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றார்.
கரூர், திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் காக்கா தோப்பு அருகே சாலையை கடக்க முயன்ற போது எதிரே வேகமாக வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டார்.இதில் பலத்த காயமடைந்த சரவணன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.







