--- --:--:-- --

தி மு க மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கட்சிகளும் பங்கேற்பு

5.1

த்திய – மாநில அரசுகளின் வஞ்சத்தை அம்பலப்படுத்த, விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்களுக்காக மத்திய அரசை கண்டித்தும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் ஆதரவு அளித்துள்ள மாநில எடப்பாடி அரசைக் கண்டித்தும் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தி.மு.க தலைமையில் அனைத்துக் கட்சிகள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

 

இராமநாதபுரம் அரண்மனை பகுதியில் நடைப்பெற்ற, கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் கலந்து கொண்டு மத்திய – மாநில அரசுகளை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பி, பொருள் வர்த்தக மசோதா, விளை பொருளுக்கு உரிய விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருள்கள் திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் அவசர அவசரமாக தாக்கல் செய்யப்பட்டு நுகர்வோர் உள்ளிட்ட பொதுமக்களுக்கு எதிரானதும் – வேளாண்மை முன்னேற்றத்திற்குப் பின்னடைவைத் தரக்கூடியதும் – கூட்டாட்சித் தத்துவத்திற்குப் புறம்பானதுமான மூன்று சட்டங்களை மக்களிடத்தில் விளக்கி உரையாற்றினார்.

இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி முன்னிலை வகித்தார் மேலும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சண்முகராஜன், காங்கிரஸ் கட்சியின் சார்பில் மணிகண்டன், தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் தமிழ் முருகன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மற்றும் தோழமைக் கட்சியை சார்ந்தவ நிர்வாகிகள் பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Right Menu Icon