முதல்வர் எடப்பாடி பழனிசாமி “விவசாயி” இல்லை… “விஷவாயு”!! மு.க.ஸ்டாலின் ஆவேச தாக்குதல்!!
முதல்வர் எடப்பாடி தன்னை விவசாயி.. விவசாயி.. என அடிக்கடி சொல்கிறாரே அவர் உண்மையிலேயே விவசாயியா?
எடப்பாடி பழனிச்சாமி விவசாயி இல்லை விஷவாயு என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக தாக்குதல் தொடுத்துள்ளார்.
மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார், அப்போது அவர் பேசுகையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
விவசாயிகளுக்கு எதிரான வேளாண் மசோதாவை அதிமுக அரசும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஆதரித்ததை சுட்டிக்காட்டி மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது தன்னை விவசாயி, விவசாயி என கூறிக் கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உண்மையிலேயே விவசாயி தானா? என்று கேள்வி எழுப்பினார். அத்துடன் எடப்பாடி விவசாயி இல்லை விஷ வாயு என்றும் மு.க.ஸ்டாலின் விமர்சித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் விவசாயி போல் பச்சை நிறத்தில் விவசாயிகளை வஞ்சிக்கும் வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்ற வாசகங்களுடன் மாஸ்க், பச்சை நிற துண்டு அணிந்து பங்கேற்ற மு.க.ஸ்டாலின் ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் அருகே உள்ள கிராமத்தில் விவசாய பணிகளில் ஈடுபட்டிருந்த விவசாயிகளுடன் கலந்துரையாடினார். வயல் வரப்புகளில் நடந்து சென்று விவசாயாளிடம் அவர் உரையாடியது, சமீபத்தில் முதல்வர் எடப்பாடியும் இதே போன்று விவசாயி வேஷம் போட்டதை நினைவு கூறுவது போல் வித்தியாசமாக இருந்தது.






