பிரபல ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன் கொரொனா தொற்றில் இருந்து மீண்டுள்ளார்..!
பிரபல ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன் தனக்கும் குடும்பத்தினருக்கும் கொரொனா தொற்று ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் டுவைன் ஜான்சன் நெருங்கிய நண்பர்கள் மூலம் தனக்கும், மனைவி மற்றும் இரண்டு மகள்களுக்கும் இரண்டரை வாரங்களுக்கு முன்பு கொரொனா தொற்று ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
தாங்கள் தற்போது கொரொனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு விட்டதாக தெரிவித்திருக்கும் டுவைன் ஜான்சன் அனைவரும் முக கவசம் அணிவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.







