--- --:--:-- --

“அயோத்தில் பிரதமர் மோடி பக்தி பரவசம்”!! அனுமன், குழந்தை ராமர் கோவில்களில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு!!

Eeo8eXQVoAAeIZ3
அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவுக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு அனுமன் கோவில் மற்றும் குழந்தை ராமர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து பக்தி பரவசத்துடன் வழிபட்டார்.

 

இந்துக்களின் 500 ஆண்டுகால கனவான ராமபிரான் பிறந்த புண்ணிய பூமியான அயோத்தியில் அவருக்கு கோவில் கட்ட வேண்டும் என்பது இன்று நிறைவேறியுள்ளது. இன்று கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு அயோத்தி நகரமே திருவிழா கோலம் பூண்டுள்ளது. எங்கும் வண்ணமயமாக ஜொலிக்கிறது ராமபிரான் பிறந்த சரயு நதிக்கரையில் அமைந்துள்ள அயோத்திமா நகரம்.

அடிக்கல் நாட்டு விழாவுக்காக சிறப்பு விமானத்தில் உ.பி.தலைநகர் வக்னோவுக்கு பறந்த பிரதமர் மோடி, அங்கிருந்து அயோத்திக்கு ஹெலிகாப்டரில் சென்றார். அயோத்தியில் கால் வைத்தவுடன் முதலில் பிரசித்தி பெற்ற அனுமன் கோவிலுக்குச் சென்ற பிரதமர் மோடி, பக்திப் பரவசத்துடன் சிறப்பு பூஜை செய்து அனுமனை வணங்கினார்.

 

பின்னர் குழந்தை ராமர் கோவிலுக்குச் சென்று மலர்கள் தூவி பூஜித்து வணங்கினார்.அதைத் தொடர்ந்து ராம ஜென்ம பூமியில் அடியெடுத்து .வைத்த பிரதமர் மோடி, வரலாற்றுச் சிறப்புமிக்க ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon