--- --:--:-- --

மேட்டுப்பாளையத்தில் ரூ.30.49 கோடி மதிப்பீட்டில் 352 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணியினை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்

மேட்டுப்பாளையத்தில் ரூ.30.49 கோடி மதிப்பீட்டில் 352 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணியினை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிக்கதாசம்பாளையம. ஊராட்சிக்குட்பட்ட அறிவொளி நகரில் ஆயிரக்கணக்கானோர் குடியிருந்து வருகின்றனர்.இப்பகுதி மக்கள் தங்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

 

இதனையடுத்து தமிழக அரசு அறிவொளி நகருக்கு அருகில் உள்ள காய்கறிகள் குளிரப்பதன கிடங்கு அருகே 352 குடியிருப்புகள் கட்டிக்கொடுக்க உத்தரவிட்டது.இதற்காக ரூ.30.49 கோடி நிதியினையும் ஒதுக்கியது. ரூ.30.49 கோடி மதிப்பீட்டில் 400 ச.அடி பரப்பளவில் 352 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணியினை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி,முன்னாள் எம்.பி.ஏ.கே.செல்வராஜ்,எம்.எல்.ஏ – க்கள் ஓ.கே.சின்னராஜ்,குன்னூர் சாந்தி ராமு,சிக்கதாசம்பாளையம் ஊராட்சிமன்ற தலைவர் மாலா (எ) விமலா,சிக்காரம்பாளையம் ஊராட்சிமன்ற தலைவர. ஞானசேகரன்,பெள்ளாதி ஊராட்சிமன்ற தலைவர் பூபதி (எ) குமரேசன்,இரும்பறை ஊராட்சிமன்ற தலைவர் ராஜேஸ்வரி,கெம்மாரம்பாளையம் ஊராட்சிமன்ற தலைவர் செல்வி,நகர செயலாளர் வான்மதி சேட்,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் நாசர்,நகர அம்மா பேரவை செயலாளர் வெள்ளியங்கிரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon