--- --:--:-- --

சென்னையில் 24 மணி நேரம் தண்ணீர் கட்!

6

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முக்கிய குடிநீர் குழாய் இணைப்பு பணிகளை மேற்கொள்ளவுள்ளதால், நவம்பர் 25-ஆம் தேதி காலை 9 மணி முதல் 24 மணி நேரத்திற்கு சென்னையின் 4 மண்டலங்களில் குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் அறிவித்துள்ளது.

 

 

புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வியாசர்பாடி மற்றும் படேல் நகர் குடிநீர் பகிர்மான நிலையங்களுக்கு குடிநீர் கொண்டு செல்லும் வடக்குப் பிரதான குடிநீர் குழாயில், மாதவரம் பால் பண்ணை மெட்ரோ ரயில் நிலையத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் குழாய் இணைப்பு பணிகளை மேற்கொள்ளவுள்ளதாக குடிநீர் வாரியம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நான்கு மண்டலங்களில் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

 

 

மாதவரம் மண்டலம்: மேத்தா நகர், ராமச்சந்திரா நகர், முத்து மாரியம்மன் கோவில் தெரு, அன்னை சத்யா நகர், சந்திரபாபு காலனி பிரதான சாலை, மெஜஸ்டிக் காலனி, தணிகாச்சலம் நகர் ‘எஸ்’ பிளாக் மற்றும் பொன்னியம்மன்மேடு.

 

 

தண்டையார்பேட்டை மண்டலம்: கவியரசு கண்ணதாசன் நகர், முத்தமிழ் நகர், கொடுங்கையூர், எம்.கே.பி. நகர், தண்டையார்பேட்டை, வ.உ.சி. நகர், ஜே.ஜே. நகர், கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை மணிக்கூண்டு, காசிமேடு, ராயபுரம், சுப்பிரமணியம் தெரு (பெரம்பூர்), பி.பி. சாலை (பெரம்பூர்) மற்றும் வியாசர்பாடி தெற்கு.

 

 

திரு.வி.க. நகர் மண்டலம்: மூலக்கடை, அயனாவரம் மற்றும் மாதவரம் நெடுஞ்சாலை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதிக்கப்படும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் போதுமான அளவு குடிநீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறு சென்னை குடிநீர் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. குழாய் இணைப்புகள் இல்லாத பகுதிகள் மற்றும் குறைந்த அழுத்தம் உள்ள பகுதிகளுக்கு தெரு தொட்டிகள் மற்றும் தெரு குழாய்கள் உட்பட, லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எவ்வித தடையுமின்றி வழக்கம்போல் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon