--- --:--:-- --

தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

10

தமிழகத்தில் வெப்பச் சலனத்தின் காரணமாக இன்றும். நாளையும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில்லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆந்திரா, லட்சத்தீவு, கேரளா மற்றும் கர்நாடக கடலோரப் பகுதிகளிலும் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளிலும் சூறை காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் மத்திய கிழக்கு வங்க கடலில் 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உரு வாக்க வாய்ப்பிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon