--- --:--:-- --

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

6

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரியின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் ஏனைய பகுதிகளிலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

 

சென்னையில் அதிகபட்சமாக 38 டிகிரியும் குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும். வங்கக்கடலில் இன்று உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை நிலை நாளை உருவாகக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது.

 

ஜூன் 9ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை வங்கக்கடல், ஆந்திரா, கேரளா, மற்றும் கர்நாடகா கடலோரப் பகுதி, லட்சத் தீவு பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

கடலலை 3 முதல் 3.4 மீட்டர் வரை குளச்சல் கடல் பகுதி முதல் தனுஷ்கோடி வரை ஒரு சில நேரங்களில் எழக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon