சிறுத்தையின் பல்லை உடைத்து அடித்து கொலை செய்த 6 பேர்!
அசாம் மாநிலம் கவுகாத்தி அருகே காட்டுப் பகுதியில் ஒரு சிறுத்தையை மிருகத்தனமாக அடித்து கொலை செய்த சிறுவன் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மிகவும் பசியுடனும், வயதாகிய தளர்வுடனும் கிராமத்தில் புகுந்த சிறுத்தையை அந்த ஊரில் சிலர் வலை வீசிப் பிடித்து அதன் பல்லை உடைத்து தெருவில் தரதரவென இழுத்துச் சென்று சித்திரவதை செய்து அடித்துக் கொன்ற காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.
இதனையடுத்து வனத்துறையினரின் உத்தரவின்பேரில் சில இளைஞர்களை அடையாளம் கண்டு போலீசார் கைது செய்துள்ளனர்.






