--- --:--:-- --

பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா காலமானார்!

11

பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 39. கடந்த 2009ஆம் ஆண்டு கன்னட திரையுலகில் வாயுபுத்ரா எனும் படத்தின் மூலம் அறிமுகமானவர். விசில், ராம்லீலா, பஜாரி உட்பட 20க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

 

சிரஞ்சீவி சர்ஜா தமிழ் நடிகர் அர்ஜூனின் உறவினர் ஆவார். அதேபோல் மூத்த நடிகர் சக்தி பிரசாத்தின் பேரன் ஆவார். பெங்களூர் மருத்துவமனையில் நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் அவர் பிற்பகலில் அனுமதிக்கப்பட்டார்.

 

அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவிற்கு கன்னட திரையுலகினர் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சிரஞ்சீவி சார்ஜாவில் மனைவி மேகனா ராஜின் திரைப்பட நடிகையாவார். இருவரும் கடந்த 2011ஆம் ஆண்டில் தான் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon