சிறுமியிடம் ஆபாசமாக பேசியவர் கைது..!
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சிறுமியிடம் ஆபாசமாக பேசியதாக கொரொனா தன்னார்வலர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குத்தாலத்தை அடுத்த கோமல் என்ற இடத்தில் கொரொனா தன்னார்வலராக கோனேரிராஜபுரத்தை சேர்ந்த சிவ பிரசாத் என்பவர் பணியாற்றி வந்தார்.
இவர் கோமல் பகுதியில் உள்ள ஒரு 16 வயது சிறுமியிடம் ஆபாசமாக பேசியதாக சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் சிவபிரசாத் போலீசார் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






