இந்திய வங்கதேச எல்லையில் 4.3 ரிக்டர் அளவையில் நிலநடுக்கம்!
இந்திய – வங்கதேச எல்லையில் இன்று காலை 7.10 மணி அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவையில் இது 4.3 ஆக பதிவானது. மேகாலயா மாநிலம் சிரபுஞ்சியில் 82 கிலோ மீட்டர் தொலைவில் தென்கிழக்கு பகுதியில் நிலநடுக்க மையம் உணரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் லேசான அதிர்வுகளை ஏற்படுத்தியதாகவும் உயிர் மற்றும் உடமைகளுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






