--- --:--:-- --

கர்ப்பமாக இருந்த யானைக்கு அன்னாசி பழத்தில் பட்டாசு வைத்து கொன்ற நபர்! நீரில் ஜலசமாதி அடைந்த யானை!

12.1

கேரள மாநிலத்தில் கர்ப்பிணி யானைக்கு பட்டாசு வைத்து அன்னாசி பழத்தை கொடுத்து கொன்ற மனிதாபிமானமற்ற நபரை கேரள வனத்துறை தீவிரமாக தேடி வருகிறது. தாடை பாதிக்கப்பட்ட நிலையில் உயிர் போய்விடும் என அறிந்த யானை ஜலசமாதி அடைந்துள்ளது.

 

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள அட்டப்பாடி வனச்சரகத்தில் பெண் யானை ஒன்று மர்ம நபர் பட்டாசுடன் அன்னாசிப்பழத்தை சாப்பிட கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்தப் பழத்தை சாப்பிட முயன்ற பெண் யானையின் தாடை நொறுங்கியுள்ளது. ஒரு கட்டத்தில் உயிர் போய்விடும் என அறிந்த அந்த பெண் யானை அருகிலுள்ள வெள்ளி ஆற்றில் நின்றபடியே உயிரை விட்டுள்ளது.

 

யானை ஜல சமாதி அடைந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனிடையே தகவலறிந்த வனத்துறையினர் அந்த யானையை அங்கிருந்து அப்புறப்படுத்தி உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர். இதில் அந்த பெண் யானை கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது.

 

ஈவு, இரக்கமின்றி அன்னாசி பழத்துடன் பட்டாசை கொடுத்து கருவுற்ற யானையைக் கொன்ற அந்த மர்ம நபரை தீவிரமாக தேடி வருவதாக தெரிவித்த கேரள மாநில முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சுரேந்திர குமார் சம்பந்தப்பட்ட நபருக்கு கடுமையான தண்டனை பெற்று தரப்படும் என உறுதிபட தெரிவித்துள்ளார்.இந்த சம்பவம் பெரும் கோபத்தை மக்களிடையே உருவாக்கியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon