--- --:--:-- --

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணைத் தாக்கிய காவல்துறை அதிகாரிகள்!

8

அமெரிக்காவில் கருப்பின பெண்ணை தாக்கிய காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பால்டிமோர் பகுதியில் சிறிய விபத்து தொடர்பாக மனநலம் பாதிக்கப்பட்ட கருப்பின பெண் ஒருவரை போலீசார் இழுத்துச் செல்ல முயன்றபோது அந்த பெண் தன்னைப் பிடித்திருந்த போலீசாரை தாக்கினர்.

 

இதனைக் கண்ட மற்றொரு காவல்துறை அதிகாரி அந்த பெண்ணின் முகத்தில் தாக்கியதில் நிலைகுலைந்து கீழே விழுந்த அப்பெண்ணின் தலையில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கருப்பின பெண்ணை தாக்கிய காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மின்னசோட்டா பகுதியில் கருப்பின இளைஞரை போலீசாரும் அழுத்தி கொன்றதால் அமெரிக்கா முழுவதும் போராட்டம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon