--- --:--:-- --

இருசக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதிய சி‌சி‌டி‌வி காட்சி!

14

மதுரை அலங்காநல்லூர் அருகே சரக்கு வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் உயிரிழந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மணியஞ்சி பகுதியை சேர்ந்த ஓட்டுனரான பிரகாஷ் என்ற இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் மதுரையை நோக்கி சென்றார். குளமங்கலத்தில் உள்ள சாலை வளைவில் திரும்பும் போது எதிர் திசையில் வந்த சரக்கு வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

 

இதில் படுகாயமடைந்த பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் சரக்கு வாகன ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். முன்னே சென்ற இருசக்கர வாகனத்தை சரக்கு வாகனம் அதிவேகத்தில் முந்த முயன்ற போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon