நிகர்நிலை கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது!
பல்கலைக்கழகம் என்ற வார்த்தையை நிகர்நிலை கல்வி நிறுவனங்கள் பயன்படுத்தக்கூடாது என்று யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு எச்சரித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள 127 நிகர்நிலை கல்வி நிறுவனங்கள் தங்கள் கல்வி நிறுவன பெயருக்குப் பின்னால் பல்கலைக்கழகம் என்ற வார்த்தையை பயன்படுத்த கூடாது என கடந்த 2017 நவம்பரில் யுஜிசி தடை விதித்தது.
உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி யுஜிசி விதித்துள்ள தடையை மீறி பல்வேறு நிகர்நிலை கல்வி நிறுவனங்கள் தங்கள் இணைய தளத்திலும் விளம்பரத்திலும் லெட்டர் பேடிலும் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் என குறிப்பிட்டுள்ளதாக புகார்கள் வந்ததை அடுத்து பல்கலைக்கழகம் என்ற வார்த்தையை நீக்க தவறினால் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று யுஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இனிவரும் நாட்களில் நிகர்நிலை அந்தஸ்து பெற்ற கல்வி நிறுவனம் என்றுதான் குறிப்பிட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.






