ஹிந்தி தொலைக்காட்சி நடிகை பிரெக்சா மேத்தா தூக்கிட்டுத் தற்கொலை!
ஹிந்தி தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்த நடிகை பிரெக்சா மேத்தா இந்தூரில் உள்ள தனது வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
25 வயதான பிரெக்சா மேத்தா மேரி துர்கா, கிரைம் பேட்ரோல், லாலீஸ்க் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு இல்லாததால் மும்பையிலிருந்து வந்து இந்தூரிலேயே தங்கி இருந்தார்.
அவர் இறந்ததற்கான காரணம் தெரியவில்லை என்ற போதும் மன அழுத்தத்தால் மிகுந்த சோர்வடைந்து காணப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். கனவுகள் கலைந்து போவது மாதிரியான துன்பம் வேறு இல்லை என்று அந்த இளம் நடிகைஅண்மையில் இன்ஸ்டாகிராமில் பதிவு போட்டிருந்தார்.






