--- --:--:-- --

கொரோனா சீன ஆய்வகத்தில் இருந்து பரவியதற்கான சான்றுகள் உள்ளன!

6

கொரொனா தொற்று சீனாவின் ஆய்வகத்தில் இருந்து வெளிவந்ததற்கான சான்றுகள் இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். கொரொனா வைரசின் தீவிரத்தை மறைக்க சீனா உலக சுகாதார நிறுவனத்தை ஒரு கருவியாக பயன்படுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

 

கொரொனா வைரஸின் தீவிரத்தை சீனா வேண்டும் என்று மறைத்ததாகவும் மைக் பாம்பியோ குறிப்பிட்டுள்ளார். கொரொனா வைரசின் தீவிரத்தை உணர்ந்த சீனா ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்தே மருத்துவ பொருட்களை சேமித்து வைத்து இருந்ததாக கூறிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கொரொனா தொற்று பரவியது.

 

அதற்கான காரணத்தையும் மீண்டும் இது போன்ற வைரஸ் தாக்குதல் நடக்கிறது என்பதையும் சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார். தொடக்கத்தில் கொரொனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலை அதிபர் டொனால்ட் டிரம்ப் குறைத்து மதிப்பிட்டார் என்றும் , உலகம் முழுவதும் கொரொனா வேகமாக பரவி வந்த நேரத்தில் அமெரிக்காவிற்கு இது ஒரு பிரச்சனையாக இருக்காது என்று அவர் கூறியதாகவும் மைக் பாம்பியோ தெரிவித்தார்.

 

கொரொனா தொற்று சீனாவின் ஆய்வகத்தில் இருந்து வந்ததற்கான சான்றுகள் இருப்பதாகவும் கொரொனா வைரஸின் தீவிரத்தை மறைக்க சீனா உலக சுகாதார நிறுவனத்தை ஒரு கருவியாக பயன்படுத்தியதாகவும் பாம்பியோ குற்றம்சாட்டினார்.

Leave a Reply

Right Menu Icon