--- --:--:-- --

டெல்லியை திறந்துவிடும் நேரம் வந்து விட்டது !

2

கொரோனா வைரஸ் உடன் வாழ மக்கள் தயாராக வேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் காணொளி வாயிலாக செய்தியாளர்களை சந்தித்த அவர் டெல்லியில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை மட்டுமே சிவப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றும், ஒட்டுமொத்தமாக மாவட்டத்தையும் அறிவிக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு பரிந்துரை இருப்பதாக கூறியுள்ளார்.

 

கொரொனா பாதிப்பே இல்லை என்ற நிலை தற்போது சாத்தியம் இல்லாதது என்று தெரிவித்துள்ள கெஜ்ரிவால் உலகம் முழுவதும் கொரொனா பாதிப்பு உள்ளதாக கூறினார். டெல்லியை திறந்துவிடும் நேரம் வந்து விட்டது எனவும் கொரொனா வைரசுடன் வாழத் தயாராக வேண்டும் எனவும் கூறியுள்ள கெஜ்ரிவால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 3,500 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாகவும், தற்போது 300 கோடி ரூபாய் வருவாய் கிடைத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon