ரஷ்ய போர் விமானங்கள் சர்வதேச எல்லைக்குட்பட்ட வான்பரப்பில் பறந்ததால் பதற்றம்
பால்டிக் கடலின் சர்வதேச எல்லைக் குட்பட்ட வான்பரப்பில் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் திறன் படைத்த ரஷியாவின் போர் விமானங்கள் பறந்தால் அவற்றை பின்லாந்து, டென்மார்க், ஸ்வீடன் ஜெட் விமானங்கள் சூழ்ந்து பறந்தன. ஆர்டிக், அண்டார்டிக், பசுபிக் மற்றும் கடல் வான் பரப்புகளில் ரஷ்ய விமானங்கள் பயிற்சிக்காக பறப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் அணு ஆயுத ஏவுகணைகளை சுமந்து செல்லும் திறன் படைத்த குண்டு வீசி தாக்கும் டியு 160 விமானம் 2 பால்டிக் கடல் பரப்பில் பயிற்சிக்காக பறந்துள்ளன. 8 மணி நேரம் வானில் பறந்த போது குறிப்பிட்ட சில பகுதிகளில் பின்லாந்து, டென்மார்க், ஸ்வீடன், ஜெட் விமானங்கள் ரஷ்ய விமானங்களை சூழ்ந்து பரந்துள்ளன.
ஆனால் தாங்கள் எவ்விதத்திலும் சர்வதேச விதிகளை மீறவில்லை என்று ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சகம் கூறியுள்ளது. மாற்று நாட்டு விமானங்களால் வான்பரப்பில் அச்சுறுத்தல் என்று கருதும் போது இதுபோல விமானங்கள் சூழ்ந்து பரந்து விரட்டியடிப்பது வழக்கமாகும்.






