--- --:--:-- --

தன்னை சந்திக்க வரவேண்டாம் என அறிவிப்பு பலகை வைத்த அமைச்சர்..!

1

தன்னை பார்க்க யாரும் வர வேண்டாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் தனது வீட்டில் அறிவிப்பு பலகை வைத்துள்ளார். கொரொனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் குள்ளம்பாளையத்தில் அமைந்துள்ள தன்னுடைய வீட்டின் முகப்பில் அறிவிப்பு பலகை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வரும் மார்ச் 31ஆம் தேதி வரை தன்னை வீட்டிலோ அல்லது சென்னையிலோ சந்திக்க வரவேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

 

இதனால் அமைச்சரை சந்திக்க வருபவர்கள் தோட்டத்து வீட்டின் முகப்பு வாயில் கேட் உடனே திரும்பி செல்கிறார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon