கட்சி ஆரம்பிப்பாரா என்பது ரஜினிக்கே தெரியாது
நடிகர் ரஜினி கட்சி தொடங்குவது என்பது அவருக்கும் தெரியாது நமக்கும் தெரியாது என்று நடிகர் வடிவேலு கூறியுள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடிகர் வடிவேலு சுவாமி தரிசனம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் உலக நன்மைக்காக சுவாமி தரிசனம் செய்வதாக கூறினார். கட்சிக்கு ஒருவர் ஆட்சிக்கு ஒருவர் என்ற ரஜினியின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது எனவும் அவர் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




