முதலையின் கழுத்தில் சிக்கியுள்ள டையரை எடுத்தால் சன்மானம்
முதலையின் கழுத்தில் மாட்டியுள்ள இருசக்கர வாகனத்தின் டயரை அப்புறப்படுத்துவோர்க்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று இந்தோனேசிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்தோனேசியாவின் மத்திய சுலவேசி மாகாணத்தில் உப்பு நீரில் வாழ்ந்து வரும் 13 அடி நீள முதலையின் கழுத்தில் நீண்ட காலமாக டயர் ஒன்று மாட்டிக் கொண்டுள்ளது.
அந்தப் டயரை எடுக்க உள்ளூர் மக்கள் பலரும் முயன்ற நிலையில் தோல்வியைத் தழுவினர். இந்த நிலையில் டயரின் இறுக்கத்தினால் முதலைக்கு ஆபத்து ஏற்படுவதை உணர்ந்த அதிகாரிகள் முதலையின் கழுத்தில் சிக்கியுள்ள டயரை எடுப்பவர்களுக்கு சன்மானம் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.
அதற்காக பொதுமக்கள் முதலையை நெருங்கி செல்லக்கூடாது என்றும் அதன் வாழ்விடத்தை தொந்தரவு செய்யக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




