--- --:--:-- --

’அமித் ஷா பேசுகிறேன்’ – ஆளுநரை ஏமாற்ற முயன்ற அதிகாரி கைது

11

உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுவதாக கூறி மத்திய பிரதேச ஆளுநரை ஏமாற்ற முயன்ற விமானப்படை அதிகாரி கைது செய்யப்பட்டார். டெல்லியில் விமானப் படையின் கமாண்டர் ஆக இருப்பவர் குல்தீப்.

 

இவரது கோபாலை சேர்ந்த நண்பரும் மருத்துவருமான சதீஷ்குமார் சுக்லா என்பவர் ஜவகர் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்து முதல் கட்டத் தேர்வில் வெற்றியை பெற்றுள்ளார்.

 

இந்த நிலையில் மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட கமாண்டர் குல்தீப், அமித்ஷா பேசுவதாகவும் துணைவேந்தர் பதவியை சந்திரேஷ்குமாருக்கு வழங்குமாறும் உத்தரவிட்டிருக்கிறார். அவருக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து விசாரணையில் இறங்கிய போலீசார் 2 பேரையும் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon