இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காவலர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். நத்தம்பட்டி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தவர் கார்த்திக் பாண்டியன்.
இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அழகாபுரி அருகே இருசக்கர வாகனத்தில் நண்பருடன் சென்று கொண்டிருந்தார். பாறைபட்டியில் உள்ள சாலை வளைவில் திரும்பிய போது எதிரே அதிவேகத்தில் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் கார்த்திக் பாண்டியனின் வாகனத்தின் மீது நேருக்கு நேராக மோதி விபத்திற்குள்ளானது.
இதில் காவலர் கார்த்திக் பாண்டியன் மற்றும் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த தேனியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் காளீஸ்வரன், ஜெயந்த் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.





