திருப்பூர் மாவட்ட ஐக்கிய சுன்னத் ஜமாஅத் சார்பில், குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பள்ளிவாசல் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
என் ஆர் சி., சி ஏ ஏ., என் பி ஆர் போன்ற மக்கள் விரோத சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி திருப்பூர் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் திருப்பூர் மாவட்ட ஐக்கிய சுன்னத் ஜமாஅத் சார்பில் அனுப்பர்பாளையம் சிவானந்தா வீதியில் உள்ள மஸ்ஜித் சித்திக் சுன்னத் வல் ஜமாத் பள்ளிவாசல் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மஸ்ஜிதே சித்திக் பள்ளிவாசல் தலைவர் முபாரக் தலைமை தாங்கினார். செயலாளர் அன்வர் பாஷா முன்னிலை வகித்தார். பள்ளிவாசல் ஹஜரத் கலீல் அஹமது போராட்டம் குறித்து விளக்கி பேசி ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிவிட்டது. விவசாயிகள் தற்கொலையை மறைக்கிறது. நாட்டின் வளர்ச்சி கவலைப்படாமல் இசுலாமியர்களையும், தலித் மக்களையும் துன்புறுத்தும் சட்டத்தை நாட்டில் அகதிகளின் எண்ணிக் கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கிறது. என்றார்.
பின்னர் முன்னூறுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மத்திய அரசை கண்டித்தும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.





