--- --:--:-- --

சேலம் நகைக்கடை உரிமையாளர் வீட்டில் 275 சவரன் தங்க நகை கொள்ளை

7

சேலத்தில் நகைக்கடை உரிமையாளர் வீட்டில் 275 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர். சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே வாசிம் என்பவர் நகை கடை வைத்துள்ளார். குரங்கு சாவடியில் உள்ள அவரது வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் 275 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

 

இது குறித்த புகாரின் பேரில் மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார் 3 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார். இதுவரை துப்பு துலங்காததால் சிசிடிவி காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர். சிசிடிவி காட்சிகளில் வரும் நபர்கள் குறித்த தகவல் அறிந்தால் உடனடியாக தெரிவிக்கும்படி சேலம் மாநகர போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon