மகளை இளைஞர் காதலித்ததால் தந்தை ஆத்திரம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மகளை காதலித்த இளைஞரை இரும்புக் கம்பியால் தாக்கிய தந்தையை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மாலை வீடு கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகளும் அதே பகுதியை சேர்ந்த திருமணமாகி விவாகரத்தான குமார் என்ற இளைஞரும் காதலித்ததாக கூறப்படுகிறது.

இருவரையும் குணசேகரன் பலமுறை எச்சரித்தும் காதலை முறித்துக் கொள்ளவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த குணசேகரன் தனது மகளை காதலிக்கும் குமாரை இரும்புக்கம்பியால் பலமாக தாக்கியுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் குணசேகரனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.





