--- --:--:-- --

துபாயில் கஷ்டப்படும் கணவரை மீட்டுத்தருமாறு மனைவி கோரிக்கை

5

துபாயில் கஷ்டப்படும் கணவரை மீட்டுத் தருமாறு சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். காரைக்குடி அருகே அரண்மனை சிறுவயலை சேர்ந்த சுரேஷ் என்பவர் குடும்ப சூழ்நிலை காரணமாக துபாயில் கொத்தனார் வேலைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் துபாயில் சொன்ன வேலை கொடுக்காமல் வேறு வேலை கொடுத்து துன்புறுத்தியதாகவும் அதனால் நிறுவனத்தை விட்டு வெளியேறி விட்டதாகவும் தனது மனைவிக்கு கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் நாடு திரும்ப வழியின்றி மனநலம் பாதித்தவர் போல சாலைகளில் சுற்றித்திரியும் தன்னை காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனால் அச்சமடைந்த சுரேஷின் மனைவி கவிதா, கணவர் சுரேஷை மீட்டுத்தரக் கோரி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் மற்றும் சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு மனு அளித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon