--- --:--:-- --

தனியார் விடுதியில் என்ஜினியரிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை

14

திருச்சி மாவட்டம் திருவரம்பூர் அண்ணா பல்கலைக்கழக நான்காம் ஆண்டு சிவில் இன்ஜினியரிங் மாணவி தனியார் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

தர்மபுரியை சேர்ந்த ஜெயவேலின் மகளான லோகேஸ்வரி பல்கலைக்கழகம் எதிரே உள்ள ஜேப்பர் பை மேன்ஷன் விடுதியில் தங்கியிருந்து படித்து வந்தார். தந்தை ஜெயவேலுக்கு அதிக கடன் இருந்ததால் லோகேஸ்வரி வேதனையில் இருந்து வந்துள்ளார்.

 

இந்நிலையில் பல்கலைக்கழகத்துக்கு உதவித்தொகை கேட்டு விண்ணப்பிக்க உடன் வருமாறு தன்னுடன் திருமணம் நிச்சயக்கப்பட்ட சக மாணவரை அழைத்தபோது வேறு வேலை இருப்பதாக கூறி மறுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மன உளைச்சல் ஏற்பட்டு விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon