--- --:--:-- --

தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை அடுத்த சில தினங்களுக்கு தொடரும்

9

இன்றுடன் வடகிழக்கு பருவமழை முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

 

கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை அதிகபட்சமாக நாகை மாவட்டம் கொள்ளிடம் மற்றும் புதுச்சேரியில் 9 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். மேலும் அடுத்த சில நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் வடகிழக்கு பருவ மழை தொடரும் எனவும் அவர் கூறினார்.

Leave a Reply

Right Menu Icon