--- --:--:-- --

மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர் தற்கொலை..?

4

மதுரை மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் அசாம் மாநிலத்தில் உள்ள முகாமில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. எம் கல்லுப்பட்டி அடுத்த சானர்பட்டியை சேர்ந்த வெற்றி பாண்டி என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி வந்தார்.

 

இந்நிலையில் அசாம் மாநிலத்தில் உள்ள ராணுவ முகாமிலிருந்து தொடர்பு கொண்டு அதிகாரிகள் வெற்றி பாண்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளனர். அதைக் கேட்டு அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வெற்றி பாண்டி வெளியிட்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஒரு வாரகாலம் தண்ணீர் மற்றும் உணவு இன்றி துன்பப்பட்டு வந்ததாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

Leave a Reply

Right Menu Icon