கடற்கன்னியாக வலம் வரும் பெல்ஜியம் பெண்!
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள விஜிபி பொழுதுபோக்கு பூங்காவில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு கடற்கண்ணி கண்காட்சி அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.
டிஜிபி குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ரவி தாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய நாட்டிற்கான வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஆணையர் முனிஷர்மா கலந்துகொண்டு கண்காட்சியினை தொடங்கி வைத்தார்.
இந்தியாவில் முதன்முறையாக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருக்கும் ஆழ்கடல் அருங்காட்சியகத்தை சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற வெளிநாட்டு மீன் காட்சிகளை மிஞ்சும் வகையில், குறிப்பாக சிறுவர், சிறுமியர் ஆர்வத்துடன் கண்டு களிக்கும் வகையிலும் கடற்கன்னி கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
பெல்ஜியம் நாட்டை சேர்ந்த உலகப் புகழ் பெற்ற பெண்மணி ஒருவர் கடல் கன்னியாக காட்சி அளிப்பதாகவும், வெளிநாட்டு நிறுவனத்தின் தொழில்நுட்பத்தில் கண்காட்சி அமைக்கப்பட்டிருப்பதாகவும் டிஜிபி குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ரவி தாஸ் தெரிவித்தார், இந்நிகழ்ச்சியில் பிஜிபி குழும நிறுவன தலைவர் டாக்டர் விஜி சந்தோஷம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






