டெல்லியில் அமைச்சரவையின் செயல்பாடுகள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு
மத்திய அமைச்சரவையின் கடந்த ஆறு மாத செயல்பாடுகள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு செய்து வருகிறார். டெல்லியில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் பல்வேறு துறையின் அமைச்சர்களும் தங்கள் அமைச்சகத்தின் செயல்பாடுகளை புள்ளிவிவரங்களுடன் விளக்கி வருகின்றனர்.
அரசு அறிவித்த கொள்கை முடிவுகள் எந்த அளவுக்கு நடைமுறைக்கு வந்துள்ளது என்பது குறித்து பிரதமர் கேட்டறிந்ததாக தெரிகிறது. இக்கூட்டத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டங்கள் குறித்து விவாதிக்கப் பட்டதா என தெரியவில்லை. பிரதமர் மோடி இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்து கடந்த நவம்பர் உடன் 6 மாதம் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




