--- --:--:-- --

ரூ.52 லட்சம் ஏடிஎம் பணம் கொள்ளை – கார் ஓட்டுநர் கைது

1

ஏடிஎம் மையத்தில் நிரப்ப கொண்டுசெல்லப்பட்டு 52 லட்சம் ரூபாயை திருடிச் சென்றதாக கார் ஓட்டுனரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனமொன்றில் வங்கி ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் பணியில் ஈடுபட்டு வந்தது.

 

அந்நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் 3 பேர் ஏடிஎம் மையங்களில் நிரப்புவதற்காக 87 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்றனர். அம்ருஸ் என்ற ஓட்டுநரின் காரில் பணத்தை எடுத்துக்கொண்டு ஊழியர்கள் வேளச்சேரி விஜய நகரில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு வந்தனர்.

 

ஊழியர்கள் பணம் நிரப்பிக் கொண்டிருந்தபோது காரில் இருந்த 52 லட்சம் ரூபாய் பணத்துடன் ஓட்டுனர் அம்ருஸ் தப்பிச்சென்றார். கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரது உறவினர் வீட்டில் இருந்து 32 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

 

அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் மன்னார்குடியில் பதுங்கியிருந்த அம்ருசை கைது செய்தனர். மொத்த பணத்தையும் பறிமுதல் செய்த காவல்துறையினர் அவரை சென்னைக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon