--- --:--:-- --

குழந்தையை விற்க முயன்று தப்பியோடிய பெற்றோர் கைது

9

கோவை கருமத்தம்பட்டி அருகே குழந்தையை விற்க முயன்று தப்பியோடிய பெற்றோரை போலீசார் கைது செய்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை மதுரையை சேர்ந்த கண்ணன், ஜோதி தம்பதி கோவை மதுக்கடைபகுதியை சேர்ந்த சாகிர் என்பவருக்கு தங்களது குழந்தையை விற்க முயன்ற போது போலீசாரிடம் பிடிபட்டனர்.

 

இதில் இடைத்தரகர்களாக இருந்த ஜாகீர்உசேன், ஹசீனா,கல்யாணி ஆகிய மூவரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். அப்போது தப்பியோடிய கண்ணன், ஜோதி தம்பதியை போலீசார் ஈரோட்டில் வைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து குழந்தையை மீட்டு குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.

Leave a Reply

Right Menu Icon